Special Trains for Velankanni Festival: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: Special Trains for Velankanni Festival. வேளாங்கண்ணியில் வருடாந்திர திருவிழாவைக் கருத்தில் கொண்டு வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில் சேலம், நாமக்கல், கரூர் வழியாக வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயங்கும்.

ரயில் எண்.07361 வாஸ்கோடகாமா -வேளாங்கண்ணி சிறப்பு ரயில் 06.09.2022 அன்று காலை 19.05 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் 23.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறு மார்கமாக ரயில் எண்.07362 வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா சிறப்பு ரயில் 08.09.2022 அன்று மதியம் 22.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு 10.09.2022 அன்று மதியம் 01.00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

ரயில் எண்.07361 வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் 07.09.2022 அன்று சேலம் ரயில்நிலையத்தில் – 14.05 / 14.20 மணிக்கும், ராசிபுரம் ரயில்நிலையத்தில் 14.39 / 14.41 மணிக்கும், நாமக்கல் ரயில்நிலையத்தில் 15.32/15.34 மணிக்கும், கரூர் ரயில்நிலையத்தில் 16.08/16.10 மணிக்கும் நின்று செல்லும்.

மறுமார்கமாக ரயில் எண்.07362 வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா சிறப்பு ரயில் 09.09.2022 அன்று கரூர் ரயில்நிலையத்தில் 04.28 / 04.30 மணிக்கும், நாமக்கல் ரயில்நிலையத்தில் 05.09 / 05.11 மணிக்கும், ராசிபுரம் ரயில்நிலையத்தில் 05.29/05.31 மணிக்கும், சேலம் ரயில்நிலையத்தில் 06.15/06.20 மணிக்கும் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களில் ஏசி 3-அடுக்கு-4 பெட்டிகள், ஸ்லீப்பர் வகுப்பு – 5 பெட்டிகள். பொது இரண்டாம் வகுப்பு – 7 பெட்டிகள் மற்றும் லக்கேஜ்-கம்பிரேக் வேன்-2 பெட்டிகளும் இருக்கும்.

மேலும், மட்கான், சன்வெர்தாம் தேவாலயம், குலேம், கேஸில் ராக், லோண்டா, தார்வார், ஹூப்ளி, ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவங்கேரே, பிரூர், அரசிகெரே, திப்தூர், தும்கூர், சிக் பனாவர், பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ராசிபுரம். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேளாண்கண்ணிக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே கோட்டங்களில் ஏராளமான சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.