Aam Aadmi Party : போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை: ஸ்ரீராமுலு பதவி விலக ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

பெங்களூரு : Transport workers commit suicide: Aam Aadmi Party urges Sriramulu to step down : மூன்று போக்குவரத்துத் தொழிலாளர்களின் தற்கொலைக்கு தார்மீகப் பொறுப்பேற்று, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஸ்ரீராமுலு ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில துணைத் தலைவரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான பாஸ்கர் ராவ் வலியுறுத்தினார்.

பெங்களூரு ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஸ்கர் ராவ் (Bhaskar Rao) பேசுகையில், “போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீராமுலுவின் அதிகாரத்தில் ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளது. உயர் அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களை தொடர்ந்து சித்திரவதை செய்கின்றனர். அரசு, போக்குவரத்து ஊழியர்களை எதிரிகளாக பார்க்கிறது. அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை. மக்கள் நலன் காக்க தவறிய ஸ்ரீராமுலு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அரசுப் போக்குவரத்துத் துறையில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க அதிக தகுதியும், பொறுப்புள்ள நபரும் நியமிக்கப்பட வேண்டும்.

30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான டிப்போ மேலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜிகினி, பனசங்கரி, சென்னசந்திரா டிப்போக்களில் 3 ஊழியர்கள் தற்கொலை (3 employee committed suicide) செய்து கொண்டது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையும், அமைச்சர் ஸ்ரீராமுலுவும் மௌனம் காத்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட போக்குவரத்து ஊழியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்காமல் அரசு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறது. மேலும் கரோனா தொற்றுநோயால் இறந்த நூற்றுக்கணக்கான போக்குவரத்து ஊழியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது என்றார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பெங்களூரு நகர அமைப்பு செயலாளர் சுரேஷ் ரத்தோட் (Bangalore City Organization Secretary Suresh Rathod) அதிருப்தி தெரிவித்துள்ளதாவது, போக்குவரத்து துறையை புதுப்பிக்கவும், ஊழியர்களின் நலன் காக்கவும் தவறிய ஸ்ரீராமுலு, அந்த பதவியில் நீடிக்க தகுதியற்றவர். ஸ்ரீராமுலுவை முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். தற்கொலை செய்த ஊழியர் ஹோலே பசப்பா, டிப்போ மேலாளருக்கு எதிராக தற்கொலை கடிதம் எழுதி வைத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.

“மாநகர போக்குவரத்து கழத்தின் தலைவர் நந்தீஷ் ரெட்டி (BMTC Chairman Nandish Reddy) ஆம் ஆத்மி கட்சியை எந்த காரணமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார், மேலும் தனது தவறை மறைக்கிறார். இது அவரது அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும் தனது ஊழியர்களிடம் லஞ்சம் வாங்குவதை எடுத்துக் காட்டுகிறது” என்று ரத்தோட் கூறினார். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் இல்லங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்.பேட்டியின் போது ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக‌ ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.