Vice President Venkaiah Naidu : இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது: துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை: Tamil Nadu has the best police force in India : இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் ஞாயிற்றுக்கிழமை தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொடியை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்க மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். கொடியில் அனைத்து காவலர்களுக்கும் பொருந்தும் வகையிலான புதிய லட்சினையை இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து குடியரசு துணை தலைவருக்கு நினைவு பரிசாக சதுரங்க அட்டையை (A chess card as a souvenir) முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழாவில் காவல்துறை சார்பில் துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு சென்னை காவல் ஆணையர் ஜிலால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் குடியரசுத் தலைவர் பேசியது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது (Law and order is good in Tamil Nadu). சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக காவல்துறை முன்னோடியாக உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது. விலை மதிப்பற்ற 10 சிலைகளை வெளிநாடுகளிலிருந்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவில் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin) பேசியது: தமிழக காவல் துறைக்கு நிகழாண்டு முதல் காவலர் பதக்கம் வழங்கப்படும். 160 ஆண்டுகள் காவல்துறை ஆற்றிய பணிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் குடியரசு தலைவர் கொடி. தமிழக காவல்துறை தனக்கு தானே சல்யூட் அடித்துக் கொள்ளக் கூடிய சிறப்பான நிகழ்வு இது. தமிழக காவல் துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது. தமிழக அரசு சார்பில் டிஜிபி முதல் காவல்துறை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

தமிழகத்தில் காவலர் முதல் டிஜிபி வரை காவல் துறையினர் கொடியை இனி சீருடையில் அணிய உள்ளனர். உத்தர பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீரைத் (Uttar Pradesh, Delhi, Maharashtra, Jammu and Kashmir) தொடர்ந்து குடியரசு தலைவர் கொடியை தமிழகம் பெறுகிறது. தமிழகத்தில் கடந்த ஓராண்டாக சாதிக் கலவரங்கள், மத மோதல்கள், துப்பாக்கிச்சூட சம்பவங்கள் குறைந்துள்ளன. தமிழக காவல்துறை செயல்பாடு முன்பை விட அதிக அளவில் பாராட்டப்படுகிறது. காவல் நிலைய மரணங்கள் இல்லை என சொல்லவில்லை. ஆனால் காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளன. காவல் நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலையை காவல் துறையினர் ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பக்கூடாது என்றார்.