Train Traffic Change: ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: change in train traffic has been announced: பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை – மேல கொன்னகுளம், திருப்பாச் சேத்தி – மானாமதுரை மற்றும் சூடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே ஆகஸ்ட் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில், நாளை (ஆக. 1) முதல் ஆக.31 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பகல் – 1.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலி ருந்து பகல் 12.30 மணிக்கு பதிலாக பகல் 1.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.

மேலும் திருச்சி – மானாமதுரை – திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ஆக.1 முதல் ஆக.4 வரை சிவகங்கை – மானாம துரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திண்டுக்கல் – அம் பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் ஆக.1 முதல் ஆக.31 வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் – நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் 90 நிமிடங்கள் கால தாமதமாக இயக்கப்படும்.

இதே காலத்தில் சென்னை – குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்டப்பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு:

மதுரை – செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை இறுதி வரை ரயில் சேவை முதலில் அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (Weekend Special Train) (07191) செகந்தராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், (எண் 07192) மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் புதன்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியாலகுடா, நல்கொண்டா (Dindigul, Trichy, Srirangam, Vrudhachalam, Villupuram, Tiruvannamalai, Katpadi, Chittoor, Tirupati, Renikunda, Kutur, Nellore, Ongole, Babatla, Denali, Guntur, Miriyalakuda, Nalkonda) ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு ஏசி 2 அடுக்கு பெட்டிகள், 3 ஏசி 3 அடுக்கு பெட்டிகள், 12 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு ரயில் மேலாளர் மற்றும் ஊனமுற்ற பெட்டிகள் இருக்கும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.