Shikhar Dhawan as India new ODI captain : ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டன்

அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்கினார். இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய‌ அணியின் புதிய கேப்டனாக ஷிகர் தவானை நேற்று பிசிசிஐ அறிவித்தது. ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் (Shikhar Dhawan as India new ODI captain) நியமிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று அகில இந்திய மூத்த தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் போன்ற சில முக்கிய மூத்த வீரர்கள் இடம் பெறவில்லை.

இந்தியா அணி ஜிம்பாப்வேக்கு எதிராக ஆக. 18 முதல் ஆக. 22 ஆம் தேதி வரை (Aug. 18 to Aug. 22nd)3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஐபிஎல் தொடரில் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் இளம் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்பேட்ஸ்மேன் சிறிது காலமாக தேர்வாளர்களின் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார். இறுதியாக தற்போது அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் போட்டிகளில், அவர் 37.55 சராசரி மற்றும் 158.23 ஸ்டிரைக் ரேட்டில் 413 ரன்கள் எடுத்தார், அதன் மூலம், அந்த தொடரில் இரண்டாவதாக அதிக ரன் சேர்ந்தவர் பட்டயலில் இணைந்தார்.

ஷிகர் தவான் தலைமையில் விளையாட உள்ள இந்திய அணிக்கும் காயத்திலிருந்து திரும்பியுள்ள வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் கவுன்டி கிரிக்கெட்டில் லங்காஷயர் அணிக்காக விளையாடி நார்தாம்ப்டன்ஷைருக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹரும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் அடுத்தடுத்த சர்வதேச ஆட்டங்களில் இருந்து விலகி இருந்தார். அவரும் தற்போது இந்திய அணிக்கு நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். அணியில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்றால், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா (Rohit Sharma, Virat Kohli, Jasprit Bumrah, Rishabh Pant, Mohammed Shami and Hardik Pandya)ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், மேற்கு இந்தியத் தீவுகளில் (West Indies) நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூத்த வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றி ஷிகர் தலைமையில் கிடைத்த வெற்றி என்பதால், மீண்டும் அவருக்கு கேப்டனாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரிலும் அவர் வெற்றியை தேடி தருவாரேயானால், எதிர்காலத்தில் ரோஹித் சர்மாவிற்கு அவர் போட்டியாக விளங்குவார் என்று கருத்தப்படுகிறது. இந்திய அணிக்கு வீராடி கோஹலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இருப்பினும் அவருக்கு அவ்வப்போது காயமேற்பட்டு, ஓய்வெடுப்பதால், வேறு சிலருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டு வருகிறது.