Tamil Nadu Governor goes to Delhi: தமிழக ஆளுநர் இன்று அவசர டெல்லி பயணம்

சென்னை: Tamil Nadu Governor is on an urgent trip to Delhi today. தமிழக ஆளுநர் ஆர். என் ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார்.

அவசர பயணமாக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லும் ஆளுநர், குடியரசுத்தலைவர், பிரதமரை அவர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவரும் கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்து வருகிறது. மேலும் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

இதனைத்தொடர்ந்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ள நிலையில், திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்தார்.

ஆளுநரை திரும்ப பெறும் நடவடிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் அவசர பயணமாக ஆளுநர் டெல்லி செல்கிறார். 2 நாள் பயணமாக செல்லும் ஆளுநர், டெல்லியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரை திரும்பப்பெறக்கோரி திமுக கையெழுத்து பெற்று வருவது தொடர்பாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.