Rs.75 lakh seized: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் பறிமுதல்

சென்னை: Rs.75 lakh seized at Chennai Central Railway Station. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை ரயில் நிலையம் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் முக்கிய ரயில்நிலையமாக இருந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பயணிகள் இந்த ரயில் நிலையத்திலிருந்து தான் பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்த ரயில்நிலையத்தி்ல் குற்றச்சம்பவங்களை தவிர்க்க ரயில்வே போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் இரு இளைஞர்களை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலளித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த பைகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது அந்தப் பையில் ரூ.75 லட்சம் ரொக்க பணம் எடுத்து வந்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து உரிய ஆவணமோ மற்றும் விளக்கமோ கூறாததால், பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ரயிவே போலீசார் கூறுகையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரின் சோதனையில் ரூ.75 லட்சம் சிக்கியுள்ளது. பணத்தை வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து.

மேலும் அவர்கள் பூக்கடை மின்ட் தெருவில் உள்ள நகைக்கடையில் இந்த பணத்தை கொடுக்க வந்ததும் தெரியவந்ததுள்ளது. இவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.