Holiday for schools :புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: Holiday for schools in Puducherry and Karaikal :கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் (Southwest Bay of Bengal) பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கடலோரப் பகுதிகள் உள்பட உள் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, இன்று 14 மாவட்டங்களிலும் (Today in 14 districts), நாளை 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Atmospheric mantle circulation) காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் (Puducherry and Karaikal) பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம்: புதுச்சேரி மின்துறை எச்சரிக்கை (Puducherry electricity Department alert):

மழைக்காலங்களில் மின் விபத்தை தவிர்க்க மக்கள் மின் கம்பங்களில் பந்தல், கொடி கம்பி, கயிறு கட்டக்கூடாது, ஆடு மாடுகளை கட்டக்கூடாது. மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகே உள்ள மரங்களையே அகற்ற மின்துறையை அணுக வேண்டும்.

மின்னல் தாக்கும் போது தண்ணீரில் தேங்கிய பகுதிகளில் நிற்கக்கூடாது (Do not stand in waterlogged areas during lightning strikes). டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், பயன்படுத்தக் கூடாது மின்சாதன பொருட்களை பிளக்கில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொடக்கூடாது போன்ற பல்வேறு வழிமுறைகளை புதுச்சேரி மின்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மின்துறைக்கு தகவல் தெரிவிக்க 1800 425 1912 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுடைய தகவலை மின்துறைக்கு தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.