Chief Minister M.K.Stalin : நாமக்கல்லில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

TN CM M.K.Stalin

தமிழ்நாடு: Tamilnadu Chief Minister M.K.Stalin : நாமக்கல்லில் இன்று நடைபெறும் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். கரூரிலிருந்து நாமக்கல் வந்த அவருக்கு வழிநெடுகிலும் திரளாக கூடியிருந்த மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தமிழ்நாடு கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் சனிக்கிழமை ரூ. 500.83 கோடியில் 80.750 பயனாளிகளுக்கு நல‌உதவி திட்டங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் மாற்று திறனாளிகள் உள்ளிட்ட பலர் நலதிட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாமக்கலுக்கு வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் திரளாக கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி பிரநிதிகள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். நாமக்கல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு சென்று அங்கு பயிற்சி மேற்கொண்டிருந்த கொங்கு நாட்டு பாரம்பரிய கலை உள்ளிட்ட கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்து, உற்சாகமூட்டினார். இன்று காலை 9.30 மணி முதல் மாலை வரை நடைபெறும் மாநாட்டின் இறுதியில் அவர் உரை நிகழ்த்துகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள‌ மாநாட்டு திடலின் முகப்பு சென்னை ரிப்பன் கட்டடம் போல அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி நாமக்கல் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் ஜவுளி பொருள்கள் காட்சியரங்கம், ஜவுளி உற்பத்தி வளாகம், புதிய பேருந்து நிலையம் உள்ள திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்ததால், நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.