Maharashtra : மகாராஷ்டிராவில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: பிழைக்குமா அரசு?

மகாராஸ்டிரா: Vote of confidence : மகாராஷ்டிராவில் நாளை (ஜூலை 4) ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கோவாவில் தங்கியிருந்த அதிருப்தி எம்.எம்.ஏக்கள் மும்பை திரும்பினர்.

மகராஷ்டிராவில் சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அக்கட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் 40 க்கும் மேற்பட்ட எம்.ஏல்.ஏக்கள் அதிருப்தி அடைந்து, உத்தவ் தாக்கரேவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று தங்கினர். இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ப‌கத்சிங் கோஷியாரி கோரினார். பெருபான்மையை நிரூபிப்பதற்கு முன்பு தனது முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்தார். இதனையடுத்து மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் ஆதரவுடன் பதவி ஏற்றார்.

அவருடன் பாஜகவைச் சேர்ந்த‌ தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார். இதுவும் சிவசேனையின் ஆட்சிதான் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து வந்த நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை அறிவித்தது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி ஏற்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசை ஜூலை 4-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து கோவாவில் தங்கியிருந்த சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமை இரவு விமானத்தில் மும்பை வந்தனர்.

விமான நிலையத்திற்கு நேரில் சென்ற அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்களை வரவேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அரசை தோற்கடிக்க, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.