car fell : கடலில் கார் விழுந்ததில் ஒருவர் பலி: காணாமல் போன ஒருவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்

உடுப்பி: car fell into the sea : கடலில் கார் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காணாமல் போன ஒருவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மரவந்தே பகுதியில் அரபிக்கடலின் ஓரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள‌ கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கார் கடலில் விழுந்துள்ளது. இதில் காரிலிருந்த‌ 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயியுள்ளார். காரிலிருந்து மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை 166-இல் மரவந்தே கடற்கரைசாலை என்ற இடத்தில் சனிக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்த கார், ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி கடலில் விழுந்ததுள்ளது. கடலில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுள்ளார். ஒருவர் காணாமல் போயியுள்ளார்.

கார் கடலில் விழுந்ததில் உயிரிழந்தவர் கோட்டேஷ்வர் அருகே உள்ள பீஜாடியில் வசிக்கும் ரமேஷ் ஆச்சாரின் மகன் விராஜ் ஆச்சார்யா என அடையாளம் காணப்பட்டுள்ளது. காணாமல் போனவர் இவருடைய உறவினர் ரோஷன் என்பவர் என தெரியவந்துள்ளது.

அந்தக் காரில் 4 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களில் விராஜ் என்பவர் அலையின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு நபரான ரோஷன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

கார் விழுந்ததில் காயம் அடைந்த சந்தேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கடலில் இருந்து காரை மீட்டனர்.

குந்தாப்பூர் டிவைஎஸ்பி ஸ்ரீகாந்த் பைந்தூர், இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கைகினி, கங்கொல்லி காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினய் குமார், குந்தாப்பூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சுதா பிரபு சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இது குறித்து கங்கொல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.