Tamil Nadu cabinet meeting today at 6 pm: இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: A cabinet meeting will be held this evening under the chairmanship of Tamil Nadu Chief Minister M. K. Stalin.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் சென்னையை அடுத்த பரந்தூரில் அமையவுள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இருக்கும் என்று தெரிகிறது. பரந்தூரில் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சனையில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம்? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

பரந்தூரில் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் கிராம மக்களை சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பாகவும், இழப்பீடு மற்றும் மேலும் சில சலுகைகள் வழங்குவது குறித்தும்ம் விவாதிக்கப்படலாம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் தமிழக முதல்வர் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையை சட்ட சபையில் வைப்பதா? அல்லது நேரடியாக மக்கள் பார்வையில் வெளியிடுவதா? என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டப்போதிலும், எப்போது சட்டசபையை கூட்டலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது சம்பந்தமாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. மழைநீர் வடிகால் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்படுகிறது. அப்போது பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

தமிழகத்திற்கான புதிய தொழில் முதலீடுகள், தொழில் தொடங்குவதற்காக அரசிடம் விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்குவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தின் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்வி கொள்கை உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.