Tomatoes price fallen: தேனியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் பாதிப்பு

தேனி: Farmers have been affected as the price of tomatoes and chives in Theni has fallen drastically. தேனியில் தக்காளி, சின்னவெங்காயம் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தேனி மார்க்கெட்டில் கடந்த சில மாதந்களாக சின்னவெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆவணியில் காய்கறிகள் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஆவணி மாதம் பிறந்தும் காய்கறிகளின் விலை வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தேனி மார்க்கெட்டில் தற்போது தக்காளி கிலோ ரூ.5க்கும் குறைவாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சின்னவெங்காயம் கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகள் தக்காளியை இருப்பு வைக்க முடியாததால் வேறு வழியின்றி விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் தேனி மாவட்ட விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

சின்னவெங்காயத்தை பண்டறை போட்டு இருப்பு வைக்கின்றனர். சிறிய அளவில் பண்டறை அமைக்க 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் ஒருமுறை பண்டறை அமைத்தால், எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். தற்போதைய நிலையில் விதை வெங்காயம், உழவு,நடவு, 4 முறை களையெடுப்பு, 4 முறை மருந்துதெளிப்பு, வெங்காயம் அறுவடை உள்ளிட்ட செலவுகளை கணக்கில் கொண்டால் கிலோ 30 ரூபாய்க்கு விற்றால் விவசாயிகளுக்கு அசல் தேறும். அதற்கு மேல் விற்றால் மட்டுமே லாபம் வரும். தற்போது சின்ன வெங்காயம் கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது.

ஆகவே விவசாயிகள் சின்னவெங்காயத்தை பண்டறைகளில் இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர். அறுவடையான சின்ன வெங்காயத்தை மண் இல்லாமல் உலர்த்தி, பதப்படுத்தப்பட்ட நிலையில் பண்டறைகளில் வைத்தால் சுமார் 6 மாதம் வரை கெடாமல் பாதுகாப்பாக இருக்கும். எப்போது விலை உயர்கிறதோ அப்போது சின்ன வெங்காயத்தை விற்பனை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.