Tamil Kadal Nellai Kannan : தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் காலமானார்

திருநெல்வேலி: Tamil Kadal Nellai Kannan passed away : தமிழறிஞர் நெல்லை கண்ணன் (77), வியாழக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.

நெல்லை கண்ணன் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்க்கப்பட்டிருந்தார். அவர் அதற்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை தனது இல்லத்தில் காலமானார் (He passed away at his home on Thursday). அவருக்கு மனைவி மாலதி, திரைப்பட இயக்குநர் சுரேஷ் கண்ணன் என்ற சுகா, ஆறுமுகம் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

1945 ஆம் ஆண்டு ந.சு.சுப்பையா, முத்துலட்சுமி அம்மாள் தம்பயரின் மகனாக பிறந்தார். அவருக்கு தமிழ் மீதும் இலக்கியத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். சிறந்த இலக்கியவதியாகவும் அறியப்பட்டார். தமிழறிஞர், இலக்கியப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி (Tamil Scholar, Literary Orator, Spiritual Lecturer, Politician) என்ற பன்முக திறமை கொண்டவர். பெருந்தலைவர் காமராஜருடன் நெருங்கி பழகிய இவர், ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளராக இருந்தார். மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியை 1996- ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் எதிர்த்து போட்டி இட்டார்.

இவர், 2 பாகம் குறுக்குத்துறை ரகசியங்கள் நூலையும், வடிவுடை காந்திமதியே, காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள், திக்கனைத்தும் சடை வீசி, பழம் பாடல் உள்ளிட்ட கவிதை நூல்களையும் எழுதி உள்ளார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, குவைத், துபாய், அபுதாபி (Sri Lanka, Malaysia, Singapore, England, USA, Kuwait, Dubai, Abu Dhabi) உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சொற்பொழிவு ஆற்றி உள்ளார். இவருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது. நெல்லை கண்ணனின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 1 மணிக்கு அவரது உடல் கருப்பந்துறை தாமிர பரணி ஆற்றங்கரையில் தகனம் செய்யப்படுகிறது.

நெல்லை கண்ணன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் (Obituary of Chief Minister M. K. Stalin) தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், பிரபல பேச்சாளரும், தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிய பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவெய்திய செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். கடந்த ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர் என்னிடம் அன்பு பாராட்டினார். அவருக்கு இளங்கோவடிகள் விருது வழங்கி அரசு சிறப்பித்தது. இலக்கிய அறிவில் செறிந்த, பழகுவதற்கு இனிய நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணன் மறைவிற்கு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், ஆர்.முத்தரசன், ஜி.கே.வாசன், தி.வேல்முருகன், டிடிவி தினகரன், எம்.ஜி.கே நிஜாமுதீன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.