CHENNAI DAY CELEBRATION: சென்னை நாள் கொண்டாட்டம்: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: Change in traffic at Besant Nagar Elliots Beach : சென்னை நாள் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஆக. 20, 21,22 ஆம் தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர் காவல்துறையின் போக்குவரத்து பிரிவு (Transport Division) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை பெருநகர் மாநகராட்சி சார்பில் ஆக. 20, 21, 22 ஆம் தேதிகளில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, பெசன்ட் நகர் 6 வது நிழல்சாலை புறக்காவல் நிலையம் முதல் 16 வது குறுக்குச் சாலை மீன் கடை வரை சுமார் 850 மீட்டர் தூரத்திற்கு ஆக. 20 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 22 ஆம் தேதி மாலை 6 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, 7 வது நிழல்சாலையில் இருந்து 6 வது நிழல்சாலை வரை எலியட்ஸ் சாலைக்கு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது (Vehicles are prohibited). அந்த வாகனங்கள் 16 வது குறுக்குச்சாலை வழியாக 2 வது நிழல்சாலையை நோக்கி திருப்பி விடப்படும். 3 வது பிரதான சாலையில் இருந்து 6 வது நிழல் சாலையை நோக்கி, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் 5 வது பிரதான சாலை, 2 வது பிரதான சாலை வழியாக திருப்பி விடப்படும்.

4 வது பிரதான சாலை 5 வது நிழல்சாலையில் இருந்து 6 வது நிழல் சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அந்த வாகனங்கள் 4 வது பிரதான சாலை, 5 வது நிழல்சாலை வழியாக திருப்பி விடப்படும். எனவே 3 நாள்களுக்கு (For 3 days) அந்த வழியாக செல்ல முடிவு செய்திருப்பவர்கள் வேறு பாதைகளில் செல்லுமாறு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.