வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

தில்லி-மீரட் விரைவுச் சாலையில் (DME) நின்று கொண்டிருந்த வாகனம் மீது அவர்கள் பயணித்த எஸ்யூவி வாகனம் மோதியதில் வியாழக்கிழமை ஒரு மைனர் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர் (SUV-stationary vehicle accident: 4 members of a family dead).

தில்லி-மீரட் விரைவுச்சாலையின் (Delhi-Meerut Expressway) குஷாலியா கிராமத்திற்கு அருகே எஸ்யூவி-வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தின் போது எஸ்யூவியில் 5 பேர் பயணம் செய்தனர். ஐந்து பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், 10 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஹரித்வாரில் இருந்து ரோஹ்தக் நோக்கி பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் (Belongs to Haryana State) என்று காவல் கண்காணிப்பாளர் (ஊரக) ராஜ் ராஜா தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் சுமித் (34), யாகித் (7), தேஜ்பால் (48) மற்றும் அவரது மனைவி பாப்லி (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்தை அடுத்து அடையாளம் தெரியாத வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். காசியாபாத் மூத்த காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் ஜ மற்றும் காவல் கண்காணிப்பாளர் (போக்குவரத்து) (traffic) ராமானந்த் குஷ்வாஹா ஆகியோர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: இது போன்ற விபத்துகளை நடைபெறுவதற்கு காரணம், ஒன்று அதிக வேகம். மற்றொன்று சாலை பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காததும்தான். எனவே வாகனத்தை ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் பயணிகள் வாகனங்களை இரவில் ஓட்டும்போது, அதன் ஓட்டுநர்களுக்கு பகலில் ஓய்வு அளிப்பது அவசியம். இரவு நேரங்களில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் தூக்க கலக்கத்தில் ஏற்படுவதான். எனவே பயணிகள் வாகனங்களை அவசரம் இருந்தால் ஒழிய, இரவு நேரங்களில் இயக்காமல் இருப்பது உத்தமம் என்றனர்.