Allowed To Visit Shathuragiri Temple: தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு (Allowed To Visit Shathuragiri Temple) அருகே வன பகுதியை ஒட்டிய மலை மீது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜனவரி 19) முதல் 22 ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இன்று 19ம் தேதி பிர தோஷ வழிபாடும், 21-ம் தேதி தை அமாவாசை வழிபாடும் நடைபெறுகிறது. இதனையொட்டி காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்டோர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மலையேற அனுமதி கிடையாது. கோவிலுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே மலையேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் கோயிலில் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ, அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தை அமாவாசை நாளில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நீரோடை பகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.