Pm Modi Visit To Karnataka: கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 19) கர்நாடகா (Pm Modi Visit To Karnataka) மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக் உள்ளார்.

கர்நாடகா மாநிலம், யாத்கிரி மாவட்டத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் குடிநீர், பாசனம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து கலபுரகி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். கர்நாடகா மாநில பயணத்தை முடித்துக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு சுமார் 33,800 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சில முக்கிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். மேலும் மும்பை மெட்ரோவின் இரண்டு வழி ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இரண்டு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வருகை என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.