Blood Donate Camp: இண்டூரில்
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு 15வது ஆண்டு இரத்ததானம் முகாம்

இண்டூர்: சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 18) இண்டூரில் (Blood Donate Camp) உள்ள ஸ்ரீ விநாயகா திருமண மண்டபத்தில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.

அதன்படி சேவாபாரதி தமிழ்நாடு, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, அக்னி சிறகுகள் அறக்கட்டளை, உதவும் உள்ளங்கள் சிகரம் அனைத்து வாகன ஓட்டுநர் நலச்சங்கம், தருமபுரி உதவி உன்னால் முடியும் அறக்கட்டளை, விஜய் மக்கள் இயக்கம் நல்லம்பள்ளி (மே) தருமம் அறக்கட்டளை தருமபுரி, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, சேலம் சிவராம்ஜி இரத்த வங்கி இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு 15வது ஆண்டு இரத்ததானம் முகாம் இண்டூரில் உள்ள ஸ்ரீ விநாயகா திருமண மண்டபத்தில் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு மேற்கண்ட அமைப்புகள் இரத்ததானம் முகாமை நடத்தி வருகின்றனர். இதில் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள், இரத்தானம் செய்து வருகின்றனர். அதன்படி இன்று நடைபெற்ற இரத்தான முகாமில் காலை முதலே ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டு இரத்தானம் செய்து வருகின்றனர்.

இது போன்று தானமாக வழங்கப்படும் இரத்தம், விபத்தில் காயமுற்றவர்கள், அறுவை சிகிச்சை செய்பவர்கள் மற்றும் பிரசவ சமயத்தில் கர்ப்பிணி தாய்மார்களை, இரத்தபோக்கு உள்ள சகோதரிகளை, இரத்த புற்றுநோய் தாக்கியவர்களை, இரத்தசோகை உள்ளவர்களை, இதயம், சிறுநீரகம், நுரையீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து சரி செய்து கொள்வோர்களுக்கு உதவும் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளது. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ஆதிமூலம், விஸ்வநாதன், மாதுமணி, சரவணன், பிரபு, சின்னமுத்து மற்றும் மருதம் நெல்லி பாலிடெக்கனிக் மாணவர்கள் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:New condition for shop Owners: கடை உரிமையாளர்களுக்கு புதிய நிபந்தனை விதித்த சென்னை மாநகராட்சி

முந்தைய செய்தியை பார்க்க:1,635 corruption cases: தமிழகத்தில் 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு