Who Will Win The World Cup Footbal: உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா, பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை

தோகா: 22வது உலக கோப்பை கால்பந்து (Who Will Win The World Cup Footbal) போட்டியானது கத்தார் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி கடந்த 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுலேயே ஓட்டம் பிடிக்க நேரிட்டது.

அதே போன்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில், கால் இறுதியிலேயே குரோஷியாவிடம் தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. மேலும், லீக், நாக்அவுட் முடிவின் போது நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில், உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் இறுதி ஆட்டத்தில் தற்போது பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்று (டிசம்பர் 18) லுசைல் ஜகானிக் மைதானத்தில் விளையாடுகிறது. எனவே இந்த ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3வது உலகக் கோப்பையாக அமையும்.

மேலும் மெஸ்சியின் கனவு தென்அமெரிக்கா அணி தொடக்க லீக்கிலேயே சவுதி அரேபியாவிடம் தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் அசுர வேகத்தில் வீறுநடை போடுகிறது.