Attended The Commissioning Ceremony of INS Mormugao: இந்திய கடற்படையில் இணைந்த ஐ.என்.எஸ் மர்மகோவா போர்க்கப்பல்: ராஜ்நாத்சிங் பெருமிதம்

ஐ.என்.எஸ். மர்மகோவா போர்க்கப்பல் (Attended the Commissioning Ceremony of INS Mormugao) இன்று (டிசம்பர் 18) இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஐ.என்.எஸ். மர்மகோவா போர்க்கப்பலில் பயன்படுத்தப்பட்ட 75 சதவீத உபகரணங்கள் இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும். எனவே இக்கப்பல் 163 மீட்டர் உயரமும், 17 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 7,400 டன் எடையை தாங்கி செல்லும் திறனுடையது. இக்கப்பபல் அதிகபட்சமாக வேகம் 30 கடல் நாட்டில் மைல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை இந்திய கடற்படையின் உள் நிறுவனமான ‘வார்ஷிப் டிசைன் பீரோ’வால் வடிவமைக்கப்பட்டு, ‘மாஷாகான் டாக்’ என்ற கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ் மர்மகோவா போர்க்கப்பல் முழுக்க, முழுக்க இந்தியாவிலேயே வடிமைக்கப்பட்ட ஒன்று ஆகும்.

மேலும், இந்த கப்பலில் எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. வானில் இருக்கும் இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதி நவீன போர்க்கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

போர்க்கப்பலை கடற்படையில் இணைத்த பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் திறமையை போர்க்கப்பல் காட்டுகிறது. கப்பல் கட்டுமான மையத்தில் இந்தியாவை முக்கிய இடமாக மாற்றுவதற்கான இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். மர்ம கோவா கப்பல் மிகவும் சக்தி வாய்ந்தவைகளில் ஒன்றாக கருதப்படும். இவ்வாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

முந்தைய செய்தியை பார்க்க:Who Will Win The World Cup Footbal: உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா, பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை