Minister Senthil Balaji Asked Annamalai: வெளிநாட்டு கடிகாரம் எப்படி மேட் இன் இந்தியா ஆகும்? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி?

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை (Minister Senthil Balaji Asked Annamalai) தனது கையில் கட்டியிருக்கும் கடிகாரம் வெளிநாட்டு நிறுவனமான ரபேல் போர் விமானம் செய்யப்பட்ட பாகத்தில் செய்யப்பட்டதாக கூறினார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தி.மு.கவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு, மே மாதம் 2021-ல் வாங்கிய எனது ரபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுக்கால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் என என்னுடைய ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்.

ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பிரதமர் மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய நாள் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் பொது வெளியில் வெளியிடுகிறேன். நான் அறிவித்ததைவிட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டு பிடித்தால், எனது சொத்துகள் அனைத்தையும் அரசுக்கு ஒப்படைக்க தயார். இதே போன்று வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தி.மு.கவினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்: தேர்தலுக்கு பின்னர் வாங்கியதாகச் சொல்லிவிட்டால் வேட்பு மனுவில் எதற்கு கணக்கு காட்டவில்லை என்ற கேள்வியை தவிர்க்கலாம் என புத்திசாலித்தனமாக மே 21ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த 5 லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் மேட் இன் இந்தியா வா? சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து பல்பு வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். தற்போது செந்தில் பாலாஜி மற்றும் அண்ணாமலை இருவரின் ட்விட்டர் பனிப்போர் தற்போது அதிகரித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Walkout Demanding Nlc: 25,000 ஏக்கர் வேளாண் நிலத்தை பறிக்கும் என்.எல்.எசி. கண்டித்து நடைபயணம்

முந்தைய செய்தியை பார்க்க:Shortage of medicines for Cattle : தமிழகத்தில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது : எடப்பாடி பழனிசாமி