No Government Has Done Shivaji Ganesan: சிவாஜி கணேசனுக்கு மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை: இளையராஜா

நடிகர் சிவாஜி கணேசனுக்கு (No Government Has Done Shivaji Ganesan) உரிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

முனைவர் கா.வெ.சே மருது மோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிட்டேஜ் மையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் ஆற்றிய பங்கு மற்றும் அவரின் பெருமைகள் பற்றிய புத்தகத்தை இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டு பேசியதாவது: நான் ஒரு சிறுவனமாக இங்கு பேசுகிறேன். தங்க பதக்கம் படம் போடி நாயக்கனூரில் வெளியானது. அப்போது அங்கு சிவாஜி கணேசன் வந்திருந்தார். அவர் வரும்போது நாங்கள் எல்லாம் சின்ன பிள்ளைகள். அப்படி பார்த்த எங்கள் அண்ணன் சிவாஜி கணேசன் என்று அன்போடு கையெடுத்து கும்பிட்டார்.

என்னுடைய ஸ்டுடியோவுக்கு வரும்போது ராசா நான் உள்ளே வரலாம் என்று கேட்டார். அப்போது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. என்னன்னா நீங்கள் இப்படி கேட்றிங்க என்றேன். அப்போது என்னிடம் உணர்சி பூர்வமாக பேசிக்கொண்டிருந்தார். இன்னும் நான் தமிழகம் முழுவதும் உள்ள சிவாஜி ரசிகர்களை அமர வைத்து சிவாஜியை பற்றி பேச வேண்டும் எனக்கு ஆசை இருக்கிறது. அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று நேரம் தவறாமை ஆகும். அவரை பற்றி இன்னும் நிறைய பேசிக்கொண்டே போகலாம். அதே போன்று அவருக்காக அரசு உரிய மரியாதையை செய்யவில்லை.

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டும் நோக்கத்தில் பணம் வசூலிக்கும்போது என்னிடம் நிதிக்காக வந்திருந்தார். குதிரையில் சிவாஜி இருப்பது போன்று ஒரு வெள்ளி சிலையை அவருக்கு பரிசாக வழங்க வேண்டும் நினைத்ததாகவும், அந்த பரிசில் யாருடைய பெயரும் வரக்கூடாது என்று கூறினேன். அதே நேரம் அந்த பணம் முழுவதையும் நான் கொடுத்துவிடுகிறேன் என்று பெருமையாக சொல்வேன். ஆனால் இதற்காக சுயதம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.