Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (19.12.2022)

இன்று மார்கழி மாதம் 4ம் தேதி திங்கட்கிழமை (Today Rasi Palan) 19.12.2022. மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்வீர்கள். தள்ளிப்போன திருமணத்தை மறுபடியும் பேச்சு வார்த்தையினால் முடிப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் மரியாதை உயரும். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பீர்கள்.

ரிஷபம்: வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் முளைப்பார்கள். கடுமையான வேலை செய்தாலும் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவது கடினம். ஆன்லைன் வர்த்தகங்கள் ஆபத்தை விளைவிக்கும். சூதாட்டத்தை கனவில் கூட நினைத்து பார்க்காதீர்கள். எளிய முறையில் நடந்து வியாபாரத்தை முன்னேற்றம் செய்ய உழைப்பீர்கள்.

மிதுனம்: வெளியூர்ப் பயணத்தால் அனுகூலம் கிடைக்காது. தொழிலில் சற்று கூடுதலான முதலீடு செய்ய வேண்டாம். அடுத்தவருடைய பேச்சை நம்பி அகலக் கால் வைத்து விடாதீர்கள். மிக கடினமான முயற்சிக்கு பின்னர் அரசாங்க காரியங்கள் பயனை தரும். வெளிநாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் உதவி சற்று காலதாமதமாகும்.

கடகம்: தொழில் முன்னேற்றம் அடையும். பண வரவு உயரலாம். உறவுகளில் இருந்த உரசல் விலகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவார்கள். வெளியூர்ப் பயணங்கள் வெற்றியை தரும்.

சிம்மம்: கூட இருந்து கொண்டே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் கண்டுப்பிடிப்பீர்கள். தொழிலுக்கு எதிராக இருக்கும் போட்டிகளைச் சமாளித்து விடுவீர்கள். வியாபாரம் விரிவடையும். சிறு வியாபாரிகளும் இன்று நல்ல பலனை அடைவார்கள். அரசு வேலையில் அனுகூலம் கிட்டும்.

கன்னி: உங்களின் சொல்லுக்கு வீட்டில் உரிய மரியாதை கிடைக்கும். பொதுநல சேவையால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிக்கலாம். பதவி உயர்வுக்கான வாய்ப்பு இல்லம் தேடி வரும். தனியார் துறையில் சம்பளம் அதிகரிக்கும். போட்டிகள் தங்களுக்கு சாதகமாக அமையும். பங்கு சந்தையில் இன்று எதிர்பார்த்த பலன் உண்டாகும்.

துலாம்: நல்லது செய்தாலும் கெட்ட பெயர் உண்டாகும். சிலருக்கு உதவி செய்வீர்கள். ஆனால் அது வீட்டில் உள்ளவங்களுக்கு பிடிக்காது. கடன் பத்திரங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக செயல்பட வேண்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வருவதற்கு காலதாமதமாகும்.

விருச்சிகம்: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும்போது சங்கடம் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை மிக கச்சிதமாக முடிப்பீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டாம். தேவையின்றி பண விரயம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்காமல் சற்று சிரமத்திற்கு உண்டாக நேரிடலாம்.

தனுசு: தொட்டதெல்லாம் துலங்குகின்ற நேரம் இது. விட்ட பணத்தை வியாபாரத்தில் சரி செய்வீர்கள். கூட்டாக தொழில் செய்வதற்கு ஒப்பந்தம் போடலாம். நில விற்பனை செய்வதில் நல்ல லாபம் கிட்டும். அரசு ஊழியர்கள் பணியிடத்தில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கின்ற பிரச்சனை விலகி நிம்மதி அடைவீர்கள்.

மகரம்: ஐடி துறையில் திறமையை வெளிப்படுத்தலாம். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர் கிடைக்கும். புதிய வீடு கட்டுவதற்கான அடித்தளம் ஏற்படுத்துவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சிறந்து விளங்கும் நாள். வீடு கட்டும் பொறியாளர்கள் பல்வேறு சாதனையை படைப்பீர்கள்.

கும்பம்: தந்தையின் ஆலோசனையின் பேரில் புதிய தொழில் துவங்க நேரிடும். உறவினர்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியங்களுக்கான முன்னேற்பாடுகள் செய்யலாம். பிரிந்து போன உறவுகளை சேர்க்க சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வீர்கள்.

மீனம்: அவசரமான காரியத்திற்கு மட்டும் வெளியூர் செல்லலாம். அப்படி இல்லை என்றால் பயணங்களை தவிர்க்கலாம். திமிராகப் பேசி வாக்குவாதம் செய்வதை தவிர்க்கலாம். குடும்பத்தில் கோபத்தை காட்டாமல் பிள்ளைகளின் பேச்சை காது கொடுத்து கேட்க முயற்சி செய்யுங்கள். வேலை பிரச்சனையால் உடல் சோர்வாக காணப்படும். இன்று சந்திராஷ்டம் நாள் சற்று கவனமாக நடக்கவும்.

முந்தைய செய்தியை பார்க்க:New condition for shop Owners: கடை உரிமையாளர்களுக்கு புதிய நிபந்தனை விதித்த சென்னை மாநகராட்சி

முந்தைய செய்தியை பார்க்க:Walkout Demanding Nlc: 25,000 ஏக்கர் வேளாண் நிலத்தை பறிக்கும் என்.எல்.எசி. கண்டித்து நடைபயணம்