Southwest Monsoon Intensity: தென்மேற்கு பருவமழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: India Meteorological Department has warned that the southwest monsoon will intensify.:தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக ஒடிசாவில் சில பகுதியில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.

ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஒடிசாவில் பரவலாக மழை பெய்யும் என்றும், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல்பகுதியில் சூறாவளிக் காற்றும் மணிக்கு 45 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு பகுதியில் நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதியாக வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது எனவும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வினால் தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் மழை பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் காரணமாக மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read: Vice President Election : துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கர் வெற்றி

09.07.2022 முதல் 11.07.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Also Read: Tamil Nadu Chief Minister M.K.Stalin : கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நலம் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.