Tamil Nadu Chief Minister M.K.Stalin : கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நலம் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: Wishes to Karnataka Chief Minister Basavaraj Bommai : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நலம் பெற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் (M.K.Stalin Wishes to Karnataka Chief Minister Basavaraj Bommai). வாழ்த்து செய்தியில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக‌ முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நேற்று கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக முதல்வர் பசவராஜ் பொம்மை மேற்கொள்ளவிருந்த‌ தில்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் பசவராஜ பொம்மை தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டுரை (Twitter) மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

எனக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனையடுத்து எனது தில்லி பயணம் ரத்து (Trip to Delhi cancelled) செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை 2 நாள் பயணமாக‌ இன்று முதல் தில்லி செல்லவிருந்தார். இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் ஆசாதி கா அமிர்த மஹோத்சவ் மற்றும் நிதி ஆயோக் கூட்டங்களில் முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்க இருந்தார். சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு தில்லி சென்றுவிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி (7th of August) பெங்களூரு திரும்புவதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் (Cabinet expansion in the state) அல்லது மாற்றி அமைப்பது குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவது தொடர்பாக பேசப்போவதாக‌ முதல்வர் பசவராஜ் பொம்மையும் ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெங்களூருவுக்கு வந்திருந்தபோது, ​​கர்நாடக‌த்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது முதல்வர் பசவராஜ பொம்மை கூறி இருந்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தை தில்லியில் பேசலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பொம்மையிடம் கூறியதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரியிலும் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அவருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பொம்மையின் தில்லி பயணம் ரத்து ஆனதால், பாஜகவில் அமைச்சர் பதவிக்காக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அண்மையில் ச‌ந்தோஷ் கே. பாட்டீல் (Santosh K. Patil) என்ற ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சராக பதவி வரும் கே.எஸ். ஈஸ்வரப்பாதான் காரணம் என்று எழுதி இருந்தார். இதனையடுத்து ஈஸ்வரப்பாவை ராஜிநாமா செய்யுமாறு எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தற்போது கே.எஸ். ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சர் ஆவதற்காக முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் குணமடைந்து, வழக்கம் போல தனது பணிகளை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.