SSLV rocket : இன்று காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது

ஆந்திரா : SSLV rocket with EOS-02 launching today from Sri Harikoda : புவி கண்காணிப்பு செயற்கை கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து இன்று ஏவப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்(Shri Harikota) உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குந‌ர் ராஜராஜன் கூறியது: உலகளாவிய சிறிய செயற்கைகோள்கள் ஏவுவதற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் போது, அது ஏன் செய்யப்படுகிறது? என்று எல்லோரும் கணக்கெடுப்பு செய்தார்கள். மினி, மைக்ரோ மற்றும் நானோ செயற்கைகோள்களின் வரிசையில் ஏவுதல் சேவைகளுக்கான வளர்ந்து வரும் சந்தை உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 செயற்கைகோள்கள் இந்தியாவில் இருந்து ஏவப்படும்.

கடந்த‌ பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஏவப்படும் செயற்கைகோள்களின் சராசரி எண்ணிக்கையில் ஏறக்குறைய 3 இல் 2 மடங்கு அதிகமாகும். இந்த தேவையில் 80 சதவீதம் கமிஷன் சந்தையால் இயக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் (Satish Dhawan Space Research Centre) ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. எஸ்எஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி. ராக்கெட்டுகளை போல இதற்கு 25 மணி நேரம் தேவைப்படாது என்றார்.

சிறிய ரக செயற்கைக் கோளுக்காக வடிவமைக்கப்பட்ட எடை குறைந்த முதலாவது ராக்கெட் திட்டம் இதுவாகும். தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைகோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதற்காக பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன. இதில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி 4 ஆயிரம் கிலோ (GSLV 4 thousand kg) எடையை விண்ணிற்கு கொண்டு செல்ல முடியும்.

சர்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைகோள்களை புவியின் தாழ்வட்ட பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ (Isro) புதிதாக வடிவமைத்துள்ளது. இந்த முறை அந்த வகையிலான ராக்கெட் இஓஎஸ்- 2 ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு ஏவப்படுகிறது. ஏவப்படும் இந்த ராக்கெட் 145 கிலோ எடை கொண்டது. இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் 8 கிலோ எடை கொண்ட ஆசாதி சாட் எனும் கல்விசார் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கை கோளை நாடு முழுவதிலும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த‌ மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

இது கடலோர நிலப்பரப்பின் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமங்களின் மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் (Boundary map) தயாரிப்புகள் உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள கேமராக்கள் மூலம் 6 மீட்டர் அளவிற்கு துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியும். இது சிறிய ராக்கெட் என்பதால் இதனை ஏவப்படும் நாளான 7 ஆம் தேதி காலை 6 மணி நேரத்திற்கு முன்பாகவே அதாவது இன்று அதிகாலை 3.18 மணிக்கு இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளது.