Minister Ma. Subramanian : கேரள எல்லையில் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: Medical examination for all at Kerala border : கேரள எல்லையில் உள்ள தமிழகத்தின் பகுதிகளில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை (Monkey pox) பாதிப்பு உள்ளதால், அந்த மாநிலத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பகுதிகளில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: நீட் மசோதா தொடர்பாக மத்திய அரசு எழுப்பிய 16 கேள்விகளுக்கும் தமிழக அரசு (Tamil Nadu Govt) பதில் அளித்துள்ளது. இது நல்ல முன்னேற்றமாகும். தமிழகத்தில் தொழில்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் 700 நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மருத்துவச் சேவையை தொழிலாளர்கள் பெறலாம்.

மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் 1 ஆயிரத்திற்கும் அதிக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம், மருத்துவர், செவிலியர் உள்பட 200 வகை பணிகளுக்கு நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை முடித்து, வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 4,308 பணியிடங்கள் நிரப்பப் படும் (4,308 posts will be filled).

ஈரோடு கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகள் சம்பந்தமாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உயர்நீதிமன்றத்தில் (High Court) தடை உத்தரவு பெற்றனர். அந்த தடையை நீக்க வலியுறுத்தி அரசு மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து நீதிமன்றம் தடையை விலக்க உத்தரவிட்டத்தை அடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், கேரளம், தமிழகத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் 13 இடங்களில் கண்காணிப்பை (Monitoring) தீவிரப்படுத்தி உள்ளோம். இத‌னால் இரு மாநில எல்லையை கடப்பவர்கள் மட்டுமின்றி, எல்லை பகுதியில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகி வருவதால், தொற்று நோய்களை தடுக்க (To prevent infectious diseases) தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஆறுகளின் கரையோரம் வசிப்பவர்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் அனைத்து செய்து தரப்படும். மழைக்கால நோய்களை தடுக்க சுகாதாரத்துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் (Medical camps) நடத்தப் படுகிறது. முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் மூலம் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ நடவடிக்கை எடுக்கப்படும். கர்ப்பிணிகள் வெள்ளப் பாதிக்கப்படாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக மருத்துவ முகாம்களில் கரோனா நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.