South Kannada Tamil Sangam: தென்கன்னட தமிழ் சங்க தலைவர் செயலாளர் தேர்வு

South Kannada Tamil Sangam President Secretary Election
Image credit to original source

South Kannada Tamil Sangam: தென் கன்னட மாவட்ட தமிழ் சங்க தலைவராக லிங்கராஜ் தேர்வு முன்னால் தலைவர் செயலாளர் உருப்பினர்கள் வாழ்த்து தென் கன்னட மாவட்ட தமிழ்சங்க புதிய தலைவர் செயலாலர் நிர்வாகிகள் தேர்வு புதிதாக தேர்ந்தெடுத்தவர்கள் திறம்பட நடத்த வேண்டும் என முன்னாள் தலைவர் டாக்டர் சிரிநிக்கேதன் கோரிக்கை வைத்தார்

அதன்படி தென் கன்னட மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் அதன் பொது பேரவை கூட்டம் நேற்று மங்களூர் நகரின் கத்பார்க் அருகே உள்ள லயன்ஸ் கிளப் அரங்கத்தில் நடந்தது முன்னாள் தலைவர் டாக்டர் ஸ்ரீ நிகேதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பொறுப்பிலிருந்தவர்கள் அந்த பொறுப்புகளை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர் அதன்படி தென் கன்னட மாவட்ட தமிழ் சங்கத்தின் புதிய தலைவராக லிங்கராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்

South Kannada Tamil Sangam President Secretary Election
Image credit to original source

துணைத் தலைவர்களாக லட்சுமிபதியும், மற்றும் ஆறுமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் செயலாளராக ராஜ்மோகன், பொருளாளராக முருகேஷ், இணைச் செயலாளர்களாக பாலசுப்பிரமணி,மற்றும் தேன்மொழி தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகிகளான தனபால், ரவிக்குமார், பாலசுப்பிரமணி, பாலு உள்ளிட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஸ்ரீநிகேதன் பேசும் போது தென் கன்னட மாவட்ட தமிழ் சங்கம் 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகிறது வருடா வருடம் பொங்கல் புத்தாண்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஏழைகளுக்கும் ஆசிரமங்களுக்கும் உதவுவதற்கான பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது அதே போல் புதிதாக பொறுப்பேற்றவர்களும் அதையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்