Opposition leader Siddaramaiah : பெங்களூரில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட எதிர்க் கட்சித் சித்தராமையா

rain damage : மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: Siddaramaiah inspected the rain damage : மாநில தலைநகர் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பெல்லந்தூர், மகாதேவபுரா பகுதிகளில் சேதம் அதிகமாக உள்ளது. பெங்களூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

வருண பகவான் சீற்றத்தால் முற்றிலும் சேதமடைந்த இடங்களை பார்வையிட வந்த சித்தராமையா, பெல்லந்தூர் வெளி வட்டச்சாலையில் உயிர்காக்கும் படகில் சென்று பார்வையிட்டார் (Visited Bellandur Outer Ring Road in a lifeboat). வெளி வட்டச்சாலையில் உள்ள எக்கோ ஸ்பேஸ் பகுதிக்கு சென்ற சித்தராமையா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட‌ மக்களில் இன்னல்களை கேட்டறிந்தார்.

பெங்களூரு நிலைமைக்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. சித்தராமையா ஆட்சியில் பெங்களூரில் நடந்த அத்துமீறல் காரணமாக தற்போது மழை வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை (CM Basavaraj Bommai) நேரடியாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து இன்று சித்தராமையா சேதமடைந்த பகுதியை பார்வையிட்டார். விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநில அரசை கடுமையாக சாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்த சாலையில் பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகாதேவப்புரா, சித்தாபூர் பேராங்காய் பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற இளம் பெண்ணின் வீட்டிற்கு சித்தராமையா இன்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் (Today, Siddaramaiah visited the house of a young woman named Akila and consoled the family). அப்போது அவருடன் கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வருண பகவானில் ஆர்பாட்டம் அட்டகாசமாக இருந்தது. மகாதேவபுரா, பெல்லந்தூரில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சிறிய வீடுகள் முதல் மாளிகை, அடுக்குமாடி குடியிருப்பு (From small houses to mansions and apartments) உள்ளிட்ட அனைத்து கட்டடங்களில் மழை வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.