Nayanthara’s ‘GodFather’ first look: நயன்தாராவின் ‘காட்ஃபாதர்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை: ‘GodFather’ makers unveil Nayanthara’s first look poster. நடிகை நயன்தாராவின் அதிரடி அரசியல் படமான ‘காட்பாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில், மூத்த திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான தரண் ஆதர்ஷ், ‘காட்பாதர்’ என்று தலைப்பிட்ட இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். அதில், #சல்மான்கான்… #மோகன்ராஜா இயக்கத்தில்… [புதன்கிழமை] 5 அக்டோபர் 2022 #தசரா ரிலீஸ்.” என தெரிவித்துள்ளார்.

அரசியல் படமான இதில் சத்யப்ரியா ஜெய்தேவ் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது சூப்பர் ஸ்டார் மோகன்லால் நாயகனாக நடித்த 2019 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘லூசிஃபர்’ படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் ஆகும்.

‘காட்ஃபாதர்’ தவிர, இயக்குனர் அட்லீயின் அடுத்த அதிரடி திரில்லர் படமான ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இது அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.