Seizure of 3.14 kgs of Gold: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: Seizure of 3.14 kgs of Gold by Chennai Air Customs. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் கே பி ஜெயகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் 15.01.2023 அன்று மஸ்கட் வழியாக துபாயிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தமது பைகளில் மடிக்கணினிக்குள் மறைத்து 900 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம் கொண்டு வந்தது கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல், 15.01.2023 அன்று மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் ஷார்ஜாவிலிருந்து வந்த இரு பெண் பயணிகளிடமிருந்து 766 கிராம் எடை கொண்ட 24 கேரட் சுத்தத் தங்கத்திலான 8 வளையல்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

16.01.2023 அன்று உளவுத் தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஆண் பயணி ஒருவர் 645 கிராம் எடை கொண்ட 24 கேரட் சுத்தத் தங்கத்தை பசை வடிவில் கொண்டு வந்தது கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது .

16.01.2023 அன்று மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையின் போது கொழும்பிலிருந்து வந்த இரு பெண் பயணிகளிடமிருந்து 5 பைகளிலிருந்து பசை வடிவில் மற்றும் கட்டிகள் வடிவில் மொத்தம் 837 கிராம் எடையுள்ள 24 கேரட் சுத்தத் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் மூலம் மொத்தம் 3.14 கிலோ கிராம் எடைகொண்ட 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1.59 கோடி ரூபாயாகும். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.