Governor statement about Tamilnadu: தமிழ்நாடா, தமிழகமா? ஆளுநர் வைத்த முற்றுப்புள்ளி

கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்
கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

சென்னை: Governor RN Ravi has now put an end to various criticisms of Tamil Nadu or Tamilagam.மாநிலத்தில் நிலவி வரும் தமிழ்நாடா அல்லது தமிழகமா என்ற பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது.

அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”

எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.