Palani Temple Devotee Registration: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா: இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு

திண்டுக்கல் :Online booking for taking part in Palani Murugan Temple Kumbabhishegam ceremony has started from today. பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் , பழனி முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில், வரும் 27ம் தேதி காலை 8 முதல் 9.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகத்தை காண மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படும பக்தர்கள் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் மலை கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2000 பேரும் படிவழிப்பாதை வழியாக 4ஆயிரம் பேர் என மொத்தம் 6ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்யும் முறையை அறிவித்தது கோவில் நிர்வாகம். அதாவது, குடமுழுவுக்கு விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், திருக்கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் வலைதலமான www.hrce.tn.gov.in ஆகியவற்றின் மூலம் இன்று முதல் 20.01.2023 முடிய கட்டணமில்லா முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவில் உள்ள படிவம் பக்தர்களின் விவரங்களை சேகரிக்க மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. குட முழுக்கு பெருவிழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் 18.01.2023 முதல் 20.01.2023 வரை பதிவு செய்யலாம். திருக்கோயில் நிர்வாகம் 2000 பக்தர்களை குலுக்கல் முறையில் 21.01.2023 ம் தேதி தேர்வு செய்து 22.01.2023ம் தேதியன்று வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்பட்ட விவரத்தினை பக்தர்களுக்கு பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும். தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு தங்களது தேர்வு செய்தமைக்கான அத்தாட்சியினை காண்பித்து தங்களது அடையாளச்சான்று நகலினை கொடுத்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் பழநி, இரயில்வே பீடர் ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 23.01.2023 மற்றும் 24.01.2023 ஆகிய தினங்களில் பெற்றுக்கொள்ளலாம்.