General Election to 4 States: பிப். 16ம் தேதி மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்

புதுடெல்லி: General Election to Legislative Assemblies of Meghalaya, Nagaland and Tripura. பிப். 16ம் தேதி மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு நடைபெற உள்ள மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஜனவரி 21ம் தேதி அன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஜனவரி 30ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு மீதான பரிசீலனை ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுவை திரும்ப பெற பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு பதிவு பிப்ரவரி 16ம் தேதி அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ம் தேதிகடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதி அன்று நடைபெற உள்ளது. வேட்புமனுவை திரும்ப பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு பிப்ரவரி 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான அறிவிக்கையை  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, அருணாச்சல பிரதேசத்தில் லும்லா, ஜார்க்கண்டில் ராம்கர், மேற்கு வங்கத்தில் சாகர்திகி, மகாராஷ்டிராவில் கஸ்பா பேத், சின்ச்வாட் ஆகிய 6 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் 31 (செவ்வாய்) ஜனவரி 2023 அன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 7 (செவ்வாய்) பிப்ரவரி 2023 அன்று கடைசி நாளாகும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 8 (புதன்) பிப்ரவரி 2023 அன்று நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற 10 (வெள்ளி) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு 27 (திங்கள்) பிப்ரவரி 2023 அன்று மேற்கொள்ளப்படும்.  வாக்கு எண்ணிக்கை 2 (வியாழன்) மார்ச் 2023 அன்று நடைபெறும்.