Schools holiday : உத்தரகாண்டில் கனமழை: சிகப்பு எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை

உத்தரகாண்டில் பெய்த கனமழையால் செவ்வாய்கிழமை பல மாவட்டங்களில் நிலச்சரிவு, நீர்நிலைகள் மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டன. கனமழை காரணமாக, 5 சாலைகள் வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டன. கனமழையால் சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டதால்,புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கைக்கு மத்தியில், பாகேஷ்வர், தெஹ்ரி, பௌரி, பித்தோராகர் மற்றும் நைனிடால் மாவட்டங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் (Due to red alert holiday for Schools)மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டன‌.

வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்ட சாலைகள் – பாகேஷ்வர்-டஃபாத், சாங்-கலிதர், கப்கோட்-கர்மி, ஷாமா-நௌகுரி மற்றும் ரிகாடி-பச்சம். டெஹ்ராடூன், தெஹ்ரி, பவுரி, நைனிடால், சம்பாவத், உதம் சிங் நகர் மற்றும் ஹரித்வார் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு புதன்கிழமை கனமழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன், டெஹ்ரி, பௌரி, நைனிடால், சம்பவத், உதம் சிங் நகர் மற்றும் ஹரித்வார் மாவட்டங்களில் கனமழையுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை தாக்கத்தால் நடுத்தர முதல் பெரிய நிலச்சரிவுகள் (Large landslides) மற்றும் பாதிக்கப்படையக் கூடிய பகுதிகளில் பாறைகள் விழுதல் போன்றவை ஏற்படலாம், இதன் விளைவாக நெடுஞ்சாலைகள், இணைப்புச் சாலைகள் தடைபடுவது உள்ளிட்ட பாதிப்பு ஏற்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அந்த மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிற்றோடைகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், கூடுமானவரை பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவற்றின் பல படைப்பிரிவுகள் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக நிறுத்தப்பட்டுள்ளன.

பருவமழை வடக்கு நோக்கி நகர்வதால், அடுத்த 4 நாட்களுக்கு வடமேற்கு இந்தியா மற்றும் இமயமலை அடிவாரத்தில் பரவலாகவும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) புதன்கிழமை தெரிவித்துள்ளது.