nutrition for school students : கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டசத்தை உயர்த்த நடவடிக்கை

பெங்களூரு: Govt. Action to improve nutrition for school students : கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் ஊட்டச்சத்தை உயர்த்த‌ முட்டை, வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதன் மூலம் இந்த நன்மையைப் பெறுவார்கள் என்று கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் யோஜனாவின் (Pradhan Mantri Bhojan Shakti Nirman Yojana) மதிய உணவுத் திட்டத்தின் கீழ், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 46 நாட்களுக்கு முட்டை அல்லது வாழைப்பழம் மற்றும் கடலை மிட்டாய் விநியோகிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில், பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் யோஜனாவின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு முட்டை அல்லது வாழைப்பழம் மற்றும் கடலை மிட்டாய் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு ரூ. 6 என்ற யூனிட் செலவில் 46 நாட்களுக்கு ஊட்டச்சத்து வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே போல், பீத‌ர், பெல்லாரி, விஜயநகர், கலபுர்கி, கொப்பள், ராய்ச்சூர், யாதகிரி, விஜயப்பூரா ஆகிய மாவட்டங்களில் முட்டை, வாழைப்பழம், சிக்கி ஆகியவை அடுத்த காலாண்டுக்கு வழங்கப்படும் மானியத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான முட்டை அல்லது வாழைப்பழங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விநியோகிக்க வேண்டும். இது தொடர்பாக தனி வழிகாட்டுதலை வெளியிட பொதுக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.

Must Read : Forced Girlfriend to marry: காதலியை மணமுடிக்க துடித்த காதலனுக்கு நேர்ந்த கதி

Must Read : AIADMK office sealing case: அதிமுக அலுவலக சீல் வழக்கு: சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவு

Karnataka government action to improve nutrition for school students