AIADMK office sealing case: அதிமுக அலுவலக சீல் வழக்கு: சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை: Madras High Court orders EPS to hand over the keys: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரிய வழக்கில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் (AIADMK general committee meeting) நடைபெற்றது. அப்போது கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பூட்டை உடைத்து அலுவலகத்திற்குள் நுழைந்ததால் அங்கு வன்முறை சம்பவம் அரங்கேறியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு (AIADMK Head Office) சீல் வைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) மற்றும் ஓ.பன்னீர்செல்வம் (O.Panneerselvam) தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 15ம் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) நடைபெற்றது. அதில் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது. பின்னர் 16ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. அப்போது தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினி மற்றும் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் ஆகியோரிடம் அறிக்கைகளையும், வீடியோ, சிசிடிவி மற்றும் போட்டோ ஆதாரங்களையும் நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறை தரப்பு வழக்கறிஞர், வன்முறையை தடுக்கவும், உயிரிழப்புகளை தவிர்க்கவும் போலீஸ் பாதுகாப்பு (Police protection) போடப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது என விளக்கமளித்தார்.

இந் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு (AIADMK Head Office) சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ் குமார், அதிமுக இபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை தர வேண்டும் என்றும், அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஒரு மாத காலம் தொண்டர்கள் யாரையும் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டு முன் அதிமுக தொண்டர்கள் முகாமிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.