School Holiday: ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ராணிப்பேட்டை: Today is a holiday for Ranipet district schools and colleges. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த சிலநாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக சென்னை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளக்காடாய் மாறியது. இதனால் ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கின.

இதில் சீர்காழி சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக பாதிப்புக்குள்ளாகின. கனமழையால் குடியிருப்பு பகுதிகளும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெள்ளபாதிப்பு பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.

இதனையடுத்து தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Traffic diversion in Poondamalli : மெட்ரோ ரயில் பணிகளுக்காக‌ பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்

மேலும் மாணவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களிலேயே இருந்து, மழை பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கல்வி நிறுவனங்கள், சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Due to heavy rain in Ranipet district, schools and colleges have been ordered to be closed today.