TASMAC closure for 6 days in Tiruvannamalai: திருவண்ணாமலையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்

திருவண்ணாமலை: TASMAC closure for 6 days in Tiruvannamalai. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 6 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 6:00 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபம் அன்று மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2268 அடி உயரமான மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

இதையும் படிங்க: School Holiday: ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிரந்து சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவதற்க இங்கு குவிவார்கள். பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் 4 அரசு சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த 5 உரிமம் பெற்ற மதுக்கூடங்களை டிசம்பர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை 6 நாட்கள் மூடி வைக்க ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்படும் இடங்களில் அன்னதானம் செய்ய விரும்புவோர் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதிக்குள் foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் மூலமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The District Collector has informed that liquor shops will be closed for 6 days in Tiruvannamalai on the occasion of Karthika Deepa festival.