Ayyappa devotees allowed to carry coconut in flight : ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி : சபரிமலை கோயில் தரிசன நேரங்களில் மாற்றம்

கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழாண்டு மண்டலம், மகரவிளக்கு யாத்திரையின் போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன நேரங்களை கோயில் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அனுமதி வழங்கி (Change in Sabarimala temple darshan timings: Ayyappa devotees allowed to carry coconut in flight) உள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் (Sabarimala Ayyappan Temple) ஏற்கெனவே தரிசன நேரங்கள் அதிகாலை 3 மணிமுதல் பகல் 1 மணி வரை என்றும் மாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு வரை என்றும் இருந்தன. ஆனால் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைக் கருதி மாலை 4 மணிக்குப் பதிலாக மாலை 3 மணி முதலே தரிசனம் தொடங்கும் என்று ஐயப்பன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிர்வாகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கூறியது: கடந்த 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது முதல் திங்கள்கிழமை மாலை வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர். திங்கள்கிழமை மட்டும் 70,000 பக்தர்கள் வந்திருந்தனர். செவ்வாய்க்கிழமை தரிசனத்துக்காக 60,000 பக்தர்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திருந்தனர். எனவே தரிசன நேரத்தை முன்கூட்டியே தொடங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது (The temple management has decided to start the darshan time early)என்றார்.

கேரள மாநில தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கடந்த இரு ஆண்டுகளில் க‌ரோனா பரவல் தடுப்பு விதிகள் காரணமாக தினசரி 30,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பக்தர்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் அதிகரிக்கும் (This year the number of devotees will increase by 40 to 50 percent) என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

கடந்த 17ஆம் தேதி தொடங்கிய 41 நாள் மண்டல பூஜை விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 27ஆம் தேதி நிறைவடையும். அதன் பின்பு மகரவிளக்கு யாத்திரைக்காக ஐயப்பன் கோயில் டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். அந்த யாத்திரை 2023 ஜனவரி 14ஆம் தேதி முடிவடையும். இதைத் தொடர்ந்து ஜனவரி 20 ஆம் தேதி இக்கோயில் நடை அடைக்கப்படும் (The temple will be closed on January 20).

இந்த நிலையில் சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தா்கள் விமானத்தில் தங்களுடன் தேங்காய் கொண்டுசெல்ல அனுமதிக்கும் வகையில் அதற்கான கட்டுப்பாட்டை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) தளா்த்தியுள்ளது.பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானத்தில் பயணித்து கேரளத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக, குறுகிய காலத்துக்கு அவா்கள் விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி (Coconuts are allowed to be carried on flights) அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எளிதில் தீ பற்றக்கூடிய பொருள்களில் ஒன்றான தேங்காயை, பயணிகள் தங்களுடன் விமானத்தினுள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.