YOUNG ACHIEVERS SCHOLARSHIP AWARD SCHEME: பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

சென்னை: YOUNG ACHIEVERS SCHOLARSHIP AWARD SCHEME FOR VIBRANT INDIA ENTRANCE TEST(YET) -2022: பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (https://yet.nta.ac.in) இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதார நிலையில் பிற்படுத்தப்பட்டோர் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) வகுப்பை சார்ந்த 15 ஆயிரம் மாணவ/மாணவியர்களுக்கு நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2022-2023 ஆம் கல்வியாண்டில் மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு தேசிய தேர்வு முகமையால் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் YASASVI Entrance Test (Yet) தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் நடத்தப்பட்டு மாணவ/மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்களை https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கணினி வழியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

தேர்வு செய்யப்படும் 9/10ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ரூ.75,000/-ம், 11/12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,25,000/-ம், பள்ளி கட்டணம், விடுதி கட்டணங்கள் சேர்த்து கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

26.08.2022 வரை இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்கவும், மேலும் மாணவ/மாணவியர்களால் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை சரிசெய்து கொள்ள 27.08.2022 முதல் 31.08.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு 05.09.2022 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.11.09.2022 அன்று தேர்வு நடைபெறும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது தொலைபேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண், வருமானச்சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் வைத்திருக்கவேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் https://yet.nta.ac.in/ மற்றும் http://socialjustice.gov.in/schemes/…) என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Important Dates

Dates of online registrations : 27-07-2022 to 26-08-2022
Last date of submission of forms online : 26-08-2022
Correction Window : 27-08-2022 to 31-08-2022
Display of Admit Cards online : 05-09-2022
Date of exam : 11-09-2022
Display of recorded responses and provisional answer keys : Will be announced on the NTA websit
Declaration of results : Will be announced on the NTA website.