Savarkar photo Ganeshotsav 2022 : விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் சாவர்க்கர் புகைப்படம்: இந்து ஆதரவு அமைப்புகளின் மாஸ்டர் பிளான்

Savarkar photo Ganeshotsav 2022 : தற்போது, ​​சாவர்கர் மற்றும் திப்பு புகைப்பட சர்ச்சையால் கர்நாடக மாநில அரசு குழப்பத்தில் உள்ளது. இதற்கிடையில், வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது வீர் சாவர்கர் விவகாரம் மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், காங்கிரஸுக்கும், இடதுசாரிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் விநாயகர் உற்சவத்தை சர்வாகர் உற்சவம் போல நடத்த இந்து சார்பு அமைப்புகளும், சக்ரவர்த்தி சுலிபெலே போன்ற இந்து சிந்தனையாளர்களும் தயாராகி வருகின்றனர். சாவர்கரின் தேச‌ பக்தியை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

கடந்த ஓராண்டாக, ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு தர்ம ச‌ங்கடங்களை கண்டு அதிர்ந்து போன பாஜக அரசு (BJP Govt), தற்போது தங்களுக்கு தேர்தலுக்கு கை கொடுக்க மதப் பிரச்னை இருப்பதை மதிப்பிட்டுள்ளது. மாநிலத்தில் சுதந்திர தினத்தின் போது நடந்த ஒரு ஃப்ளெக்ஸ் கலவரம் இப்போது ஆயிரக்கணக்கான சாவர்கர் ஃப்ளெக்ஸ் வைக்க‌ வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. சாவர்கர் புகைப்படத்தை எதிர்த்த இடதுசாரிகளுக்கு பதில் சொல்லும் வகையில், இம்முறை விநாயகர் சதுர்த்தி திருவிழாவுடன் சேர்த்து சாவர்கர் உற்சவத்தையும் நடத்தும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.

இந்த முடிவின்படி விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi) திருவிழாவில் சாவர்கர் ஃப்ளெக்ஸ் வைக்க திட்டம் தயாராகிவிட்டது. இந்து சார்பு சிந்தனையாளர் சக்ரவர்த்தி சுலிபெலே சாவர்கர் ஃப்ளெக்ஸ் வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாவர்கரின் புகைப்படம் ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமல்ல, திருவிழாவில் வைக்கப்படும் 10 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் சாவர்கரின் புகைப்படத்துடன், பேனர்கள் வைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் இடத்தில் பாலகங்காதர திலகர், சாவர்கர் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு பிரசாரம் செய்ய ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், விநாயகர் திருவிழாக்களுக்காக உருவாக்கப்படும் பந்தல்களில் சாவர்கரின் சாதனைகள் அடங்கிய காணொளி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதில் சாவர்கரின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்திற்கான அவுட்லைனை (Outline for the campaign) ஏற்கனவே தயார் செய்துள்ள பல இந்து சிந்தனையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் திட்டத்திற்கு இறுதி வடிவ‌த்தை கொடுப்பதில் மும்முரமாக உள்ளனர்.மொத்தத்தில் விரைவில் மாநிலத்தில் மற்றொரு மதப் பிரச்னை ஏற்படுவதற்கான சூழல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே ஒரு மதப் பிரச்னை உருவாகி, அதனுடன் அரசியல் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமோ என்ற‌ கவலையை மாநில, அரசுக்கு ஏற்படுத்தி உள்ளது. அமைதிப்பூங்காவாக திகழும் கர்நாடகத்தில் சாவர்கர், உள்ளிட்ட மத பிரச்னைகள் தொடர்ந்து எழுப்படுவதால், எதிர்க்கட்சிகளும் செய்வதறியாது திகைத்துள்ளன.