EPFO members increased by 9.21 percent: ஜூன் மாதத்தில் பிஎப் உறுப்பினர்கள் 9.21 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: EPFO members increased by 9.21 percent during the month: நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் 18.36 லட்சம் புதிய பிஎப் உறுப்பினர்கள் சேர்த்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிக ஊதியத் தரவின்படி, கடந்த ஜூன் மாதத்தில் 18.36 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. இதனால் உறுப்பினர்களின் 9.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த உறுப்பினர்களில் 18.36 லட்சம் பேரில், சுமார் 10.54 லட்சம் புதிய உறுப்பினர்கள். முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஏறக்குறைய 7.82 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறிய போதிலும், தங்கள் வேலையை மாற்றிக்கொண்டு மீண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களாக இணைந்தனர். கடந்த நிதியாண்டில் பதிவான மாதாந்திர சராசரியை விட இந்த மாதத்தில் புதிய பதிவுகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் 22-25 வயதுக்குட்பட்டவர்கள் 4.72 லட்சம் சேர்க்கைகளுடன் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை செய்துள்ளனர் என்பதை ஊதியத் தரவின் வயது வாரியான ஒப்பீடு சுட்டிக்காட்டுகிறது. முதல் முறையாக வேலை தேடுபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட துறை பணிகளில் சேருவதை இது காட்டுகிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள், மாதத்தில் சுமார் 12.61 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளன, இது மொத்தத்தில் 68.66% ஆகும். பாலின வாரியான பகுப்பாய்வு, கடந்த மாதத்தில் 3.43 லட்சமாக இருந்த நிகர பெண் உறுப்பினர்களின் சேர்க்கை நடப்பு மாதத்தில் 4.06 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 18.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.