Restrictions On New Year Celebrations: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்: சென்னை போலீஸ் கமிஷ்னர்

சென்னை: நட்சத்திர விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் நடத்தப்படும் (Restrictions On New Year Celebrations) புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அதற்கான ஆலோசனைக் கூட்டம் 29ம் தேதி நடைபெறும் என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றங்களை பொறுத்தவரையில் 75 சதவீதம் குற்றவாளிகள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதில் சில வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் சைபர் குற்றங்களை விசாரிக்கின்ற போலீசாரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சைபர் குற்றங்களை விசாரிக்க ஒரு காவல் நிலையம்தான் இருந்தது. ஆனால் தற்போது அதனை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், புதிய ஆண்டு தினத்தை ஜாலியாக கொண்டாடலாம். ஆனால் மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாடத்திற்காக ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்கப்படும். நட்சத்திர ஓட்டல்களில் எத்தனை ஆட்களை அனுமதிக்க முடியுமோ, அந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் வழங்க வேண்டும். அதிகமான டிக்கெட்டுகளை யாருக்கும் அளிக்கக்கூடாது. இதுனால் தேவையின்றி சில நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.