Recovery Of Rs 95 Crore: பொதுமக்கள் இழந்த ரூ.95 கோடி பணம் மீட்பு: சென்னை காவல்துறை நடவடிக்கை

சென்னை: கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் மோசடிகளில் (Recovery Of Rs 95 Crore) சிக்கி பொதுமக்கள் இழந்த சுமார் 95 கோடியே 85 லட்சத்து 49 ஆயிரத்து 715 ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்திருப்பதாக சென்னை காவல்துறை அளித்த புள்ளி விவரங்களில் தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவிலான ஆன்லைன் மோடி மற்றும் வேலைவாய்ப்பு மோசடி, வங்கி மோசடி, ஆவண மோசடி, கந்து வட்டி மோசடி, நில அபகரிப்பு மோசடி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளை தடுப்பதற்காக மத்திய குற்றப்பிரிவில் தனித்தனி பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. மேலும், பெரிய அளவிலான மோசடிகளை தடுப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று கடந்த 2022ம் ஆண்டு பொதுமக்கள் மோசடி சம்பவங்களில் சிக்கி இழந்த சுமார் 95 கோடியே 85 லட்சத்து 49 ஆயிரத்து 715 ரூபாய் பணத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டு உரியவர்களிடம் கொடுத்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு மட்டும் மத்திய குற்றப்பிரிவில் சுமார் 517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டதாக 565 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.