Ravindranath MP : தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ரவீந்திரநாத் எம்.பி பங்கேற்பு

சென்னை: Ravindranath MP participation in all party meeting : தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி பங்கேற்க உள்ளார்.

சென்னையில் திங்கள்கிழமை (ஆக. 1) தமிழ்நாடு தேர்தல் ஆணையம் (Election Commission) நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதிமுக எடப்பாடி அணியின் சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்ள உள்ளார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி மக்களவை அதிமுக உறுப்பினருமான ரவீந்திரநாத்தும் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோயில் ஆடித் தவசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு சென்ற ரவீந்திரநாத், அங்கு செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக தேர்தல் ஆணையம் சென்னையில் திங்கள்கிழமை நடத்தும் அனைத்துக் கட்சி (Election Commission) ஆலோசனைக் கூட்டத்தில் நானும் கலந்து கொள்ள உள்ளேன் என தெரிவித்தார்.

அண்மையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் (Edappadi Palaniswami) , ஓ பன்னீர் செல்வதற்கும் மோதல் முற்றியதையடுத்து, ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் தெரிவித்தனர். இதற்கு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிரப்பு தெரிவிக்கவே, எடப்பாடி பழனிசாமி பொதுகுழுவைக் குழுவைக் கூட்டினார். இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து அதிமுகவிலிருந்து அவர் ஓ. பன்னீர் செல்வத்தின் ( Panneer Selvam) ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி, ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினர் இல்லை என அறிவிக்குமாறு மக்களவை தலைவருக்கு கடிதம் எழுதினார். இதற்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் மக்களவை தலைவருக்கு கடிதம் எழுதி, ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை மக்களவை தலைவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் ஓ. பன்னீர் செல்வத்தை தேர்தல் ஆணையம் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்காது என யூகம் எழுந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் தற்போது அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் அணிக்கும் அழைப்பு விடுத்துள்ளதால், அதிமுகவில் குழப்பம் அதிகரித்துள்ளது. இரு தரப்பையும் தேர்தல் ஆணையம் அழைத்துள்ளதால், எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் (future elections) அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து நேருமோ என அஞ்சி, அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், நடவடிக்கையில் தங்களின் எதிர்காலம் உள்ளது என்பதால் என்பதால், ஆலோசனைக் கூட்டத்தை அதிமுகவின் இரு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.