Jeremy Lalrinnunga wins gold : பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரின்னுங்காவிற்கு தங்கப்பதக்கம்

காமன் வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது இந்தியாவிற்கு கிடைத்துள்ள 2 வது தங்கபதக்கமாகும். அவர் காமன்வெல்த் போட்டியில் 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரெமி ஸ்னாட்ச் சுற்றில் 140 கிலோ மற்றும் க்ளீன் மற்றும் ஜெர்க்கில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை(Jeremy Lalrinnunga wins gold for India In Weightlifting) வென்றுள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவின் டானியா சவுத்ரி (Tania Chaudhary) தனது மகளிர் ஒற்றையர் புல்வெளி பந்துவீச்சு 5 வது சுற்று ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்தின் ஷௌனா ஓ’நீலுக்கு எதிராக முன்னிலை பெற்றுள்ளார். இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். சைக்கிள் ஓட்டுதலில் 1/8 ஆண்களுக்கான ஸ்பிரிண்ட் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ரொனால்டோ தகுதி பெற்றுள்ளார்.

யோகேஷ்வர் சிங் காமன்வெல்த் விளையாட்டு (Commonwealth Games) 2022 இல் ஆடவர் ஆல்ரவுண்ட் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். அடுத்து பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும்மகளிர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவும் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களின் தொடக்கப் போட்டிகளில் தோல்வியடைந்து, இரண்டாவதாக விளையாடும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய அவசியத்தில் உள்ளன.

மூன்றாவது நாளில் சைக்கிள் ஓட்டுதல், குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் பூப்பந்து போன்ற நிகழ்வுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கும். 2 வது நாளில், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றதன் மூலம் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது (India has won a total of 5 medals). இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்திய 6 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 3 ஆம் நாள் நல்ல விளையாட்டு போட்டிகளில் 2 வது நாளைப் போல இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வெல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

காமன்வெல்த் விளையாட்டுகளில் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றதற்காக ஜெர்மி லால்ரின்னுங்காவுக்கு இந்தியக் குடியரசு தலைவர் திரௌப‌தி முர்மு (President Draupadi Murmu) வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்வின் போது காயம் ஏற்பட்டாலும் உங்கள் தன்னம்பிக்கை, வரலாற்றை உருவாக்கவும், லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கவும் உங்களுக்கு ஆற்றல் உதவி உள்ளது. நீங்கள் மேடையில் வெற்றி பெற்றது இந்தியர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற மகிமையான தருணங்கள் உங்களுக்கு மேலும் கிடைக்க வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.