Ramadoss said, definitely win internal reservation: வன்னியர் உள் இடஒதுக்கீட்டை நிச்சயமாக வென்றெடுப்போம்: டாக்டர் ராமதாஸ்

சென்னை: Ramadoss, the founder of PMK, said that Vanniyar will win the 10.5 percent internal reservation. வன்னியர் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிச்சையம் வென்றெடுப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 1987ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இடஒதுக்கீட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், 50,000 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் வடமாவட்டங்களில் பரபரப்பு நிலவியது. இறுதியாக, அரசு. 108 சமூகங்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் 21 பேர் உயிர் நீத்தனர்.

இந்நிலையில், இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் நினைவு நாளான இன்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவில், வன்னியர் இடஒதுக்கீட்டுப் போரில் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 35ஆவது நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்திற்கு இந்த உலகில் ஈடு இணையில்லை. அவர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்.

வன்னியர் 10.50% உள் இடஒதுக்கீட்டை மீட்டெடுப்பதில் இதுவரை என்ன நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; இப்போது என்ன நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது; இனி நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும். நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பெரியாரின் பிறந்த நாள் பதிவில், அறியாமை இருளை அகற்ற வந்த தந்தைப் பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளில் அவரை வணங்குவோம்… போற்றுவோம். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. அவை தான் நமக்கு வழிகாட்டும் விளக்குகள். அவற்றின் வழியில் நாம் பயணிப்போம் என தெரிவித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்.

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.

குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.