Allrounder Venkatesh Iyer : வெங்கடேச ஐயர் தலையில் காயம்; அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த‌ ஆம்புலன்ஸ்

Ambulance: ஆம்புலன்சில் ஏறாத ஐயர் நடந்தே பெவிலியனை அடைந்தார். பின்னர் குணமடைந்து மீண்டும் கிரீசுக்கு வந்த அவர் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கோவை: Team india Top Allrounder Venkatesh Iyer Head Injury Duleep Trophy : துலீப் ட்ரோபி போட்டியின் போது மத்திய மண்டல அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேச ஐயரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கிரிக்கெட் மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது.

கோவையில் மேற்கு மண்டலத்துக்கு எதிரான துலீப் ட்ரோபி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் (In the semi-final match of the Duleep Trophy) வெங்கடேஷ் ஐயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மத்திய மண்டலத்திற்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், மேற்கு மண்டல அணியின் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் சிந்தன் கஜாவை சிக்ஸருக்கு அடித்தார். அடுத்த பந்து தற்காப்பாக விளையாடிய பந்து, பந்து வீச்சாளர் கைகளில் சிக்கியது. சிக்ஸர் அடித்ததில் ஆவேசமடைந்திருந்த‌ சிந்தன், பந்தை விக்கெட் மீது வீசினார். அது விக்கெட் மீது விழாமல் நேராக வெங்கடேஷ் ஐயரின் பின் தலையில் பட்டது. இதனையடுத்து ஐயர் உடனே தரையில் சரிந்தார்.

வலியால் துடித்த வெங்கடேச ஐயரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மைதானத்திற்குள் நுழைய வேண்டியதாயிற்று (An ambulance had to enter the stadium). ஆனால் ஆம்புலன்சில் ஏறாத ஐயர் நடந்தே பெவிலியனை அடைந்தார். பின்னர் குணமடைந்து மீண்டும் கிரீசுக்கு வந்த அவர் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

துலீப் ட்ரோபி அரையிறுதியில் மத்திய மண்டலத்துக்கு எதிராக அஜிங்கே ரஹானே தலைமையிலான மேற்கு மண்டலம் (West zone led by Ajinkya Rahane) நல்ல நிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு மேற்கு மண்டல அணி ஆல் அவுட் ஆனது. பின்னர் பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் மத்திய மண்டல அணியை 128 ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. 129 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி, 2 ஆம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து மொத்தம் 259 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிரடியாக சதம் அடித்த வலது கை தொடக்க வீரர் பிரித்வி ஷா 96 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் எடுத்தார்.